புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 5 ஜூன் 2020 (09:36 IST)

சயீஷா கர்ப்பமா...? விளக்கம் கொடுத்த சயீஷாவின் அம்மா..!

வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான இவர், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார்.

கஜினிகாந்த் படத்தின் மூலம் காதலித்து கடந்த மார்ச் மாதம் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம்  ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பார்களா என எதிர்பார்த்துவந்த நிலையில்,  திருமணத்துக்கு பின்னரும் ஆர்யா - சாயிஷா இணைந்து "டெடி" படத்தில் நடித்து வருகின்றனர்.சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.  மேலும், ஆர்யா சல்பேட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சயீஷா கர்ப்பமாயிருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இருந்தாலும் இதுகுறித்து ஆர்யா, சயீஷாவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை இதையடுத்து சயிஷாவின் அம்மா இந்த செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்து தீயாக பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.