தமிழ்ர்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்த ராகுலுக்கு பாராட்டு- சத்யராஜ் பேச்சு!
ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்துள்ளார் ராகுல் காந்தி.
இன்று மாலை 3 மணிக்கு புத்தகக் கண்காட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் முதல் பாகம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் தமிழ் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்த ராகுல்காந்திக்கு எனது பாராட்டுக்கள். ஒரு சிங்கத்தைப் போல அவர் நாடாளுமன்றத்தில் முழங்கினார். திமுகவில் எல்லோரும் அண்ணாவின் தம்பு என அழைத்துக் கொள்வார்கள். அதுபோல நான் உங்களை எனது தம்பி என அழைத்துக்கொள்கிறேன். அண்ணா ஸ்டாலின், தம்பி ராகுல் எனப் பேசினார்.