வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (14:25 IST)

நான் நாத்திகனாக இருப்பதால் என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லையா?... சத்யராஜ் பதில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடிக்காமல் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

சத்யராஜின் மகன் சிபிராஜும் தமிழ் சினிமாவில் நடிகராக உள்ளார். அவரின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இந்நிலையில் திவ்யா சில வாரங்களுக்கு முன்னர் தன்னுடைய அம்மா மகேஸ்வரி நான்கு ஆண்டுகளாகக் கோமாவில் இருப்பதாகக் கூறியிருந்தார்.

இது சம்மந்தமான அவரது பதிவில் “என் அம்மா கடந்த 4 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறார். வீட்டிலேயே நாங்கள் அவரை கவனித்து வருகிறோம். மனதளவில் மிகுந்த சோகம் இருந்தாலும், நாங்கள் உறுதியுடன், நேர்மறையான எண்ணத்துடன், அம்மா விரைவில் சிகிச்சை மூலம் குணமடைவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். எங்கள் அம்மா நிச்சயம் நம்மிடத்தில் மீண்டும் திரும்புவார் என நம்புகிறோம்.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் நாத்திகராக சத்யராஜ் இருப்பதால்தான் அவரது மனைவி கோமாவில் இருக்கிறார்கள் என்று அவதூறு பதிவுகள் பரவின. இதற்கு இப்போது தன்னுடைய பதிவிலேயே பதிலளித்துள்ளார் சத்யராஜ் “ என் மனைவி நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பது உண்மைதான். நான் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பதால்தான் அவர் இருப்படி இருக்கிறார் என்று சொல்வது பைத்தியக்காரத் தனமாக உள்ளது.  சாமி கும்பிடுபவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லாம் உடல்நிலை சரியில்லாமல் போவது இல்லையா? விபத்துகள் நடப்பது இல்லையா? கோயிலுக்கு குடும்பத்தோடு போகும்போதே விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் நடப்பதில்லையா?” எனக் கூறியுள்ளார்.