வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (08:25 IST)

சதுரங்க வேட்டை 2' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அரவிந்தசாமி, த்ரிஷா நடித்து வரும் 'சதுரங்க வேட்டை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.



 
 
இந்த படத்தின் டீசர் ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவுள்ளது. ஏற்கனவே இன்னும் 48 மணி நேரத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று த்ரிஷா தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நகைச்சுவை நடிகர் மனோபாலா தயாரித்து வரும் இந்த படத்தில் அரவிந்தசாமி, த்ரிஷா, பூர்ணா, நாசர், ராதாரவி, ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நிர்மல் குமார் இயக்கி வரும் இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளையும் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு அஸ்வின் வினாயகமூர்த்தி என்பவர் இசையமைத்து வருகிறார்.