என்னாச்சு ராஜவம்சம் ரிலீஸ் தேதி… சைலண்ட் ஆன படக்குழு!
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிலிஸ் ஆகவில்லை.
சசிகுமார் நடித்த ராஜவம்சம் என்ற திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது என்பதும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யு சான்றிதழ் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் ராஜவம்சம் திரைப்படம் மார்ச் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்ற வதந்திக்கு முற்று புள்ளி வைத்தாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ரிலீஸ் முதலில் அக்டோபர் 1 என்றும் பின்னர் அக்டோபர் 14 என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு தேதிகளிலுமே படம் ரிலீஸாக வில்லை. இதன் தீபாவளிக்கு பெரிய படங்கள் வருவதால் இந்த ஆண்டு இறுதிவரை இனிமேல் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.