முதல்முறையாக ஜிவி பிரகாஷ் படத்திற்கு அதிகாலை காட்சி!

Last Modified செவ்வாய், 29 ஜனவரி 2019 (23:37 IST)
ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கிய 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிட்டபோது படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது
இதனை கணக்கில் கொண்டு இந்த படத்திற்கு அதிகாலை காட்சிக்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஜிவி பிரகாஷின் படம் ஒன்று அதிகாலை காட்சி திரையிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும்

இந்த நிலையில் அதே பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்திற்கு ஏற்கனவே அதிகாலை காட்சி திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகும் 'பேரன்பு' மற்றும் 'சகா' ஆகிய திரைப்படங்கள் வழக்கமான காட்சிகள் மட்டுமே திரையிடப்படுக்ம் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :