திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 18 செப்டம்பர் 2021 (15:33 IST)

மீண்டும் கதாநாயகனாகும் சரத்குமார்… இதுதான் தலைப்பு!

நடிகர் சரத்குமார் சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்திருந்தார்.

90 கள் முழுக்க தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் சரத்குமார். 2000 களில் அவரின் மார்க்கெட் சரிய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் தெலுங்கு, கன்னட சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். பின்னர் தமிழிலும் நடித்தார்.

இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் கதாநாயகனாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார். இது தண்ணீர் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்ட கதை என சொல்லப்படுகிறது.

இந்த படத்தை புதுமுக இயக்குனர் திருமலை பாலுசாமி இயக்குகிறார். சமரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது.