சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ : பார்ட் 2 உருவாகிறது!
சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் பார்ட் 2 உருவாக இருக்கிறது.
சந்தானம் நடிப்பில், ராம்பாலா இயக்கத்தில் ரிலீஸான படம் ‘தில்லுக்கு துட்டு’. ஷனன்யா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், ஆனந்தராஜ், கருணாஸ், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, சிங்கமுத்து ஆகியோர் நடித்திருந்தனர். பாடல்களுக்கு எஸ்.தமன் இசையமைக்க, கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைத்திருந்தார்.
ஹாரர் காமெடிப் படமான இது, சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. 6 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், கிட்டத்தட்ட 30 கோடிக்கும் மேல் வசூலித்தது. எனவே, இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர இருக்கிறது.