அடர்ந்த தாடி... மீசைன்னு வைரலாகும் வில்லத்தமான சந்தானம்
காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக புரமோஷன் ஆகி வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' , A 1, டகால்டி போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றுத்தந்தன.
இதையடுத்து தற்போது டிக்கிலோனா என்ற படத்தில் நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தில் சந்தானம் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி தீயாக பரவியது.
இந்நிலையில் தற்ப்போது சந்தானம் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அடர்ந்த தாடி மற்றும் மீசையுடன் நீளமான முடி வளர்ந்து குடும்பி போட்டிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புது தோற்றம் ஏதேனும் படத்திற்கானதா அல்லது கொரோனா லாக்டவுனில் இப்படி ஆகிவிட்டாரா என ஆளாளுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.