‘பிஸ்கோத்’ படம் குறித்த புதிய அப்டேட்டை தந்த சந்தானம்!
‘பிஸ்கோத்’ படம் குறித்த புதிய அப்டேட்டை தந்த சந்தானம்!
நடிகர் சந்தானம் தற்போது டிக்கிலோனா மற்றும் பிஸ்கோத் ஆகிய இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘பிஸ்கோத்’ படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி விட்டன. இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பேபி சாங் என்ற என்று தொடங்கும் இந்த பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ராதான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஆர். கண்ணன் இந்த படத்தை தயாரித்து இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே
இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆவதை அடுத்து, விரைவில் டீசர், ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டு இந்த வருட இறுதியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது