ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் காமெடி எதிர்பார்க்காதீங்க… சந்தானம் முன்னெச்சரிக்கை!
தெலுங்கில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற ஏஜெண்ட் சாய் சீனிவாசா படத்தின் ரீமேக் ஆகும். வரும் நவம்பர் 25 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை சந்தானம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் “இந்த படத்தில் காமெடியை எதிர்பார்க்காதீர்கள். இந்த படத்தில் காமடியே பண்ணவேண்டாம் என இயக்குனர் சொல்லிவிட்டார். ஒரு சாதாரண ஏஜெண்ட் ஒரு பயங்கரமான விஷயத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை” எனக் கூறியுள்ளார்.
சமீபகாலமாக சந்தானத்தின் படங்களில் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக உருவாக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.