ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 மே 2021 (17:00 IST)

நடிகர் சஞ்சய் தத்துக்கு `கோல்டன் விசா' வழங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தனக்கு வழங்கிய கோல்டன் விசா தகவலை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.

 
இந்த விசாவை தனக்கு வழங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உயரதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு எமிரேட்ஸ் அரசிடம் இருந்து நுழைவு அனுமதி கிடைத்திருப்பது பெருமையளிக்கிறது என்று சஞ்சய் தத் கூறியுள்ளார்.
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணை அதிபர், பிரதமர் மற்றும் துபை எமிரேட் ஆன ஷேக் மொஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம், தொழில்முறை திறன் வாய்ந்த சிறந்த நபர்ளுக்கு தமது நாட்டில் 10 ஆண்டுகளுக்கு கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் துபை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை கட்டமைககும் தமது முயற்சியில் இந்த நபர்கள் பங்களிப்பை வழங்குவார்கள் என்று அவர் அப்போது கூறியிருந்தார்.
 
இந்த விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் படிக்கலாம், வேலை செய்யலாம், வசிக்கலாம். அங்குள்ள தொழில்களில் 100 சதவீத முதலீடுகளை செய்யலாம். ஐந்து முதல் பத்து ஆண்டுகள்வரை வழங்கப்படும் இந்த விசா காலாவதியாகும்போது அரசின் கொள்கை முடிவுக்கு ஏற்ப அது தாமாகவே புதுப்பிக்கப்படும்.
 
கடைசியாக சஞ்சய் தத் தூர்பாஸ் என்ற நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான படத்தில் நடித்திருந்தார். அது கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி ஓடிடி பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. கேஜிஎஃப் இரண்டாம் பாகம், ஷம்ஷெரா, ப்ரித்விராஜ் மற்றும் புஜ்: ப்ரைட் ஆஃப் இந்தியா ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.