1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (10:00 IST)

விஜய் சேதுபதியுடன் நேருக்கு நேர் மோதும் சந்தானம் - மார்க்கெட் தக்கவைப்பாரா?

சந்தானம் மூன்று வேடத்தில் நடித்த ’டிக்கிலோனா’ என்ற திரைப்படத்தை கார்த்திக் யோகி இயக்கி இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள காரணத்தினால் திரையரங்குகள் திறக்கவில்லை என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கொண்டிருந்தது இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
அதே நாளில் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதியின் படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் சந்தானம் களத்தில் இறங்கியுள்ளதால் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.