புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (12:29 IST)

தர்ஷன் - சனம் ஷெட்டி காதல் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார்.  சனம் ஷெட்டியும் தர்ஷன் குறித்து நிறைய பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்ஷன்  தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்  சனம் ஷெட்டி. இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து அதன் மூலம் சர்ச்சையில் பிரபாலான சனம் ஷெட்டிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் தற்ப்போது இந்த வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி போலீசாரிடம் சனம் ஷெட்டி புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டார். பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி இருக்கும் நேரத்தில் வழக்கு விசாரிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.