புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (13:29 IST)

எம்மா சமந்தா நீயாம்மா இது...?? ஷாக் கொடுக்கும் போஸ்ட்!!

நடிகை சமந்தா சத்குருவை சந்தித்து அது குறித்து தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
தமிழ் மர்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா தனது இன்ஸ்டாகிராமில், ஆன்மீக செயல்முறையின் முழு பயிற்சி என்பது நீங்கள் உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து மகத்தான அனுபவத்தை அனுபவிப்பதே ஆகும். 
 
ஆன்மீகத்தின் நோக்கம் என்பது உங்கள் அறியாமையின் விளைவாக நீங்கள் உருவாக்கி வரையறுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து உங்களை நீங்களே உருவாக்கிக் கொண்டு வாழ்வது தான். இது ஆனந்தமான ஒரு எல்லையற்ற பொறுப்பு.
 
அறிவு மட்டும் சாதனை அல்ல. உங்களது புலன்கள் அனைத்து ஒரு வெளிப்புற தோற்றத்தை தருகின்றன. ஆனால் உண்மையான வெளிப்புறத்தை நீங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும் போது நீங்கள் உண்மையாகவே அறிவு ஒளியை பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம்  என சத்குருவோடு எடுத்த புகைப்படத்தை அப்லோட் செய்து பதிவிட்டுள்ளார். 
 
சமீபத்தில் அமலா பால் இது போன்ற ஒரு பதிவை போட்ட நிலையில் அடுத்து சமந்தா இப்படி ஒரு பதிவை போட்டிருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியையே கொடுக்கிறது.