திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (14:24 IST)

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை.. சமந்தா பற்ற வைத்த நெருப்பால் பரபரப்பு..!

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை இருப்பதாகவும் அது குறித்தும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் முகேஷ், ரஞ்சித் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை இருப்பதாகவும் இது குறித்து விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் தெலுங்கானா மாநில அரசுக்கு  நடிகை சமந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

சமந்தா தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில்   கேரளாவை போலவே பாலியல் சீண்டல்கள் குறித்து வாய்ஸ் ஆப் வுமன் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும் இந்த அறிக்கை வெளியானால் நடிகைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.

Edited by Siva