திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2024 (13:33 IST)

காயம் இல்லாமல் ஆக்‌ஷன் ஹீரோயின் ஆகமுடியுமா… ? சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து அவர் தற்போது சிட்டாடல் என்ற தொடரில் ஆக்‌ஷன் நாயகியாக நடித்து வருகிறார். இது தவிர அவர் கைவசம் பெரிய படங்கள் இல்லை. இந்நிலையில் அவர் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

அதில் அவர் தன்னுடைய காலில் அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு “காயங்கள் இல்லாமல் நான் ஆக்‌ஷன் ஹீரோயின் ஆகமுடியுமா” எனக் கேட்டுள்ளார். இதையடுத்து சமந்தா விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் நல்வார்த்தைகள் கூறிவருகின்றனர்.