செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 9 ஜனவரி 2023 (17:21 IST)

கஷ்டங்கள் வந்தாலும் சினிமா மீதான காதலை இழக்கவில்லை- சமந்தா

கஷ்டங்கள்  வந்த போதிலும் சினிமாவின் மீதான கதலை இழக்கவில்லை என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் சாகுந்தலம். இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். நீலிமா குனா தயாரிதிதுள்ளார்,. மணி சர்மா இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படம் பிப்ரவரி 27ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்படடுள்ளது.

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின்  டிரெயிலர் இன்று காலை வெளியானது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் குணசேகர் சாகுந்தலம் படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா என்றும்,  தயாரிப்பாளர்  நீலிமாதான் இப்படத்தில் நடிக்க சமந்தாவை நடிக்க பரிந்துரை செய்ததாகப் பேசினார்.

இதைக் கேட்ட சமந்தா  நெகிழ்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.

நடிகை சமந்தா  பேசும்போது, ''சமீபத்தில் பல கஷ்டங்களை சந்தித்தாலும், சினிமா மீதான காதலை இழக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.