1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 1 மே 2023 (07:51 IST)

“பெண்கள் உடலை எவ்வளவு மறைக்கிறார்களோ அவ்வளவு நல்லது” – சல்மான் கருத்து!

சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் நீண்ட காலதாமதத்துக்குப் பின்னர் வெளியான ராதே திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் சல்மான் கான் அடுத்ததாக தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு கிஸி க பாய் கிஸி கி ஜான் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களையும் சராசரியான வசூலையும் பெற்றது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களுக்கு இருக்கும் ஆடைக் கட்டுப்பாடு குறித்து பேசிய சல்மான் கான் “பெண்களின் உடல் விலைமதிப்பற்றது. அதை எவ்வளவுக்கு எவ்வளவு மறைக்கிறார்களோ அவ்வளவு நல்லது. பெண்களை ஆண்கள் பார்க்கும் பார்வை சரியில்லை. எனக்கு பிடிக்காத விஷயம் இது. இதை நான் பெண்களை குறை சொல்வதற்காக சொல்லவில்லை.” எனக் கூறியுள்ளார்.

ஆனால் சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களின் பெரும்பாலான படங்களில் பெண் நடிகர்களை காட்சி பொருளாகவே காட்சிப் படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.