திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:50 IST)

என்னது 1000 கோடி ரூபாய் சம்பளமா?... பிக்பாஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சல்மான் கான்!

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதன்முதலில் ஆரம்பித்தது இந்தி திரையுலகம்தான். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 15 சீசன்கள் அங்கு ஒளிபரப்பாகியுள்ளன. இந்த அனைத்து சீசன்களையும் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கினார். ஆனால் பலமுறை அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்பியதாகவும், ஆனால் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் விரைவில் பிக்பாஸ் சீசன் 16 ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் தனக்கு கடந்த முறை வாங்கியதை விட 3 மடங்கு சம்பளம் அதிகமாக வேண்டும் என சல்மான் கான் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவர் இந்த சீசனுக்கு அவருக்கு 1000 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகின.

ஆனால் அந்த தகவலை இப்போது சல்மான் கான் மறுத்துள்ளார். இது சம்மந்தமாக அவர் “1000 கோடி ரூபாய் சம்பளம் பெற்றால் அதன் பிறகு நான் சம்பாதிக்கவே வேண்டாம். இப்படி வதந்தி பரப்பி கிடைக்காத சம்பளத்தை அவர்களுக்கே திருமப் கொடுக்கலாம் என நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.