வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (08:13 IST)

ஜோதிகாவின் சம்பளம் இத்தனை கோடியா? டாப் ஹீரோயின்களே அதிர்ச்சி!!

காற்றின் மொழி படத்திற்கு நடிகை ஜோதிகா இவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பதைக் கேட்டு டாப் ஹீரோயின்களே வாயடைத்துப் போயுள்ளார்களாம்.
ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் தான் ஜோதிகா. எல்லா முன்னணி நடிகர்களுடம் நடித்த பெருமை இவருக்கு உண்டு. பின்னர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்னர் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
 
சமீபத்தில் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரீ கொடுத்த ஜோதிகா, அந்த படத்தில் தன் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் நாச்சியார், செக்க சிவந்த வானம், அதில் அவருக்கு பெரிய கேரக்டர் ஒன்றும் இல்லை.
ஆனால் நேற்று வெளியாகி இருக்கும் காற்றின் மொழி திரைப்படம் வேற லெவல் என்று ஜோதிகாவை பலர் பாராட்டி வருகின்றனர். இந்த படத்தில் ஜோதிகா சிறப்பாக நடித்துள்ளார் என பல தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காற்றின் மொழி படத்தில் நடிக்க ஜோதிகா 1.25 கோடி சம்பளம் வாங்கினாராம். அடுத்ததாக அவர் நடிக்கவுள்ள படத்திற்கு 1.5 கோடி சம்பளம் வாங்க இருக்கிறாராம். ஜோதிகாவின் இந்த சம்பளமானது டாப் ஹீரோயின்களையே அதிர வைத்துள்ளதாம்.