கீர்த்தி சுரேஷ் தோத்துப்போயிட்டாங்க... காந்தாரி பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்ட சாக்ஷி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் உருவாகியிருக்கும் "காந்தாரி" பாடலுக்கு சாக்ஷி செம ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.