பிரபாஸ் படத்தில் வில்லன், வில்லியாக சைஃப் அலிகான் & கரீனா கபூர்!
பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ், இந்திய சினிமாவின் பேன் இந்தியன் ஸ்டார் ஆகிவிட்டார். அதன் பின்னர் அவர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்தாலும், கடைசியாக அவர் நடித்த கல்கி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் பிரபாஸின் 25 ஆவது படமான ஸ்பிரிட் என்ற படத்தை அனிமல் புகழ் சந்தீப் ரெட்டி வாங்க இயக்க உள்ளார். இந்த படம் பற்றி பேசியுள்ள சந்தீப் “ஸ்பிரிட் திரைப்படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இந்த படம் முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும். இந்த படத்தில் பிரபாஸ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். திரைக்கதை பணிகள் பெரும்பகுதி முடிந்துவிட்டது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தில் தென் கொரியாவின் பிரபல நடிகரான மா டாங் சியோக் வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல இன்னொரு முக்கியமான வில்லன் வேடத்தில் சைஃப் அலிகானும், அவரது மனைவி கரீனா கபூர் வில்லியாகவும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்திலும் அவர்கள் கணவன் மனைவியாகவே நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.