வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (07:34 IST)

‘வேதாளம்’ ரீமேக்கில் தங்கை கேரக்டரில் தனுஷ் நாயகி!

தல அஜித், ஸ்ருதிஹாசன் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய ‘ வேதாளம்’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு கமல்ஹாசனின் தூங்காவனம் என்ற படத்துடன் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் தற்போது தயாராகி வருகிறது. அஜித் நடித்த வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் லட்சுமி மேனன் நடித்த தங்கை கேரக்டரில் நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தனுஷ் நடித்த ’மாரி 2’ உள்பட பல படங்களில் நடித்த சாய்பல்லவி தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் சிரஞ்சீவியின் தங்கையாக வேதாளம் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தெலுங்கு உலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 
மேலும் சிரஞ்சீவி ஜோடியாக இந்த படத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை நான்கே மாதங்களில் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது