திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 மார்ச் 2021 (15:05 IST)

உங்க படத்துல நடிக்கிறேன்… ஆனா ஒரு கண்டீஷன் – எஸ் வி சேகர் ஸ்ட்ரிக்ட்!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக்கில் எஸ் வி சேகர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஆர்ட்டிகிள் 15 ரீமேக் படம் தமிழில் உருவாக இருந்தது. இந்த படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த படம் ரிலீஸ ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இப்போது படத்தைப் பற்றிய ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.

படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் எஸ்வி சேகர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அரசியல் ரீதியாக உதயநிதியும் எஸ் வி சேகரும் எதிரெதிர் துருவத்தில் உள்ள நிலையில் இணைந்து ஒரே படத்தில் நடிக்க சம்மதித்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சம்மதிப்பதற்கு முன்னதாக ஒரு நிபந்தனையும் விதித்துள்ளாராம் எஸ் வி சேகர். அது என்னவென்றால் படத்தில் தான் இருக்கும் காட்சிகளில் மோடியையோ மத்திய அரசையோ விமர்சனம் செய்வது போல இருக்கக்கூடாது எனக் கூறியுள்ளாராம். அதற்கு இயக்குனர் அருண்ராஜா காமராஜும் ஒத்துக்கொண்டுள்ளாராம்.