புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (08:47 IST)

விஷாலுக்கு வாய்ப்பு வழங்காத கேஜிஎப் 2 படக்குழு… இந்த முறை இவர்தான் விநியோகஸ்தராம்!

யாஷ் நடித்துள்ள கேஜிஎப் 2 படத்தின் தமிழக விநியோக உரிமையை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கைப்பற்றி உள்ளாராம்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் முதல் பாகத்தை கேஜிஎப் படத்தின் முதல் பாக உரிமையைக் கைப்பற்றிய விஷாலின் VFF நிறுவனம் கைப்பற்றி இருந்தது. ஆனால் இரண்டாம் பாக உரிமையை முன்னணித் தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபு கைப்பற்றி உள்ளாராம். இதற்கு விஷாலின் தயாரிப்பு நிறுவனம் பயங்கரமான கடன் நெருக்கடி சூழலில் உள்ளதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.