திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 1 ஜூலை 2017 (17:52 IST)

ஒரு பாடலுக்கு ரூ.2 கோடி செலவு வைத்த பிரபுதேவா- ஹன்சிகா!!

பிரபுதேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும் நடிக்கும் திரைப்படம் குலேபகாவலி. இந்த படத்தை எஸ்.கல்யாண் இயக்குகிறார்.


 
 
இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டும் 2 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. கலை இயக்குனர் கதிர் பிரமாண்டமாக அரங்கு அமைத்துள்ளார். 
 
இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் இசையில் நடன இயக்குனர் ஜானி பாடலுக்கு நடனம் அமைக்கிறார். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் கே.ஜே.ஆர். ராஜேஷ் தயாரிக்கிறார்.
 
இந்த பாடல் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. பட  உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது.