1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 25 ஜனவரி 2021 (15:17 IST)

எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர். ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி என்பது தெரிந்ததே. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ’ஆர்.ஆர்.ஆர்’  என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார் என்பதும் இந்தப் படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்த படத்தில் அஜய் தேவ்கான், ஆலியா பட் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் திரைப்படம் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என சற்று முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பாக இந்த படம் இருக்கும் என்றும் இந்த படமும் பாகுபலி படம் போல் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது