ஜனவரியிலேயே ரிலீஸாகிறதா ஆர் ஆர் ஆர்… குழப்பத்தை ஏற்படுத்திய தகவல்!
ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலிஸ் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பெரும்பகுதிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாடலான நட்பு 5 மொழிகளில் வெளியாகி கவனிப்பைப் பெற்றது. இந்நிலையில் அந்த பாடலின் காட்சிகள் இப்போது உக்ரைனில் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் படத்தின் நாயகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் இந்த ஆண்டு இறுதியில் இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்குதான் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது 2022 ஜனவரி 7 ஆம் தேதியே ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஜனவரி மாதத்தில் மகேஷ் பாபு, பவன் கல்யாண் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரின் படங்களின் ரிலீஸ் இருப்பதாகவே ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது