செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (19:30 IST)

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘ராக்கெட்டரி’ படம் பார்த்த பிரபலங்கள்!

rocketery
கேன்ஸ் திரைப்பட விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் மாதவன் நடித்த ‘ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. இதனை தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
மாதவன் நடித்த ‘ராக்கெட்டரி’ படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட நிலையில் இந்த படத்தை ஏஆர் ரகுமான், பார்த்திபன், பா ரஞ்சித் உள்பட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் இந்த படத்தை பார்த்தனர்.
 
 இந்த படத்தை பார்த்து ஏஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் மிகச்சிறந்த படம் என்றும் மாதவன் மேல் தனது மரியாதை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார் 
 
அதேபோல் பார்த்திபன் இந்த படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் நடிகர் மாதவன் நடித்து இயக்கி தயாரித்த ‘ராக்கெட்டரி’ படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது