1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 13 டிசம்பர் 2023 (12:58 IST)

கோடிக்கணக்கில் பணம் பெற்ற நடிகர் ஆர்.கே.சுரேஷ்

ஆருத்ரா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகர் ஆர்.கே. சுரேஷிடம் இன்று  நடத்தப்பட்ட விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
 

கடந்த சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே. சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது,  திடீரென ஆர் கே சுரேஷ் துபாய்க்கு சென்ற நிலையில் மீண்டும் சென்னை திரும்பிய அவர் சென்னை அவர் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

நேற்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்‘’தனக்கும் ஆருத்ரா  மோசடிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளது. அது நாளை சமர்ப்பிக்கப்படும்’’ என்று தெரிவித்திருந்தார்.

 ‘’சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில்  நேற்று  7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் மீண்டும்  இன்று ஆர்.கே.சுரேஷ் ஆஜராகவுள்ளதாக’’ தகவல் வெளியானது.

இந்த  நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடிகர். ஆர். கே.சுரேஷிடம் நடத்திய விசாரணையில், தயாரிப்பாளர் ரூசோவிடம் இருந்து வங்கிக் கணக்கு மூலமாகவும், பணமாகவும் கோடிக்கணக்கில் பெற்றதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில் மேலும் சில உண்மைகள் வெளியாகும் என்ற தெரிகிறது.