திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 20 ஜூன் 2020 (10:36 IST)

கரீனா கபூரையே காறித்துப்பிட்டு இருகாங்க... இதுல நீங்க வேற சம்மக்கு சல்லோன்னு

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.


அந்தவகையில் ஷிவானியும் கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராமில் டான்ஸ் ஆடுவது , பாட்டு பாடுவது , ஒர்க் அவுட் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஷாருக் கான் - கரீனா கபூர் பாடலான சம்மக்கு சல்லோ என்ற ஹிந்தி பாடலுக்கு நடனமாடிய விடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர் ஒருவர் "கரீனா கபூரையே காறித்துப்பிட்டு இருகாங்க இதுல நீங்க வேற" என கமெண்ட் அடுத்துள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் கரீனா கபூர் மீதும் வழக்கு தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

After a long time ❤️

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on