விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வரும் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். டி இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. அண்மையில் இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் , அஜித்தின் விஸ்வாசம் படம் ஜனவரி 10-ம் தேதி திரைக்குவரவிருக்கிறது என நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. படத்தின் ஓவர்சீஸ் விநியோகிஸ்தர்கள் மூலம் இச்செய்தி தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அறிந்த தல ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் விஸ்வாசம் திருவிழாவை கொண்டாட துவங்கிவிட்டனர்.