வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 நவம்பர் 2018 (18:35 IST)

எனக்கா ரெட்கார்டு? விஷாலுக்கு தன் ஸ்டைலில் பதில் சொன்ன சிம்பு!

நடிகர் சிம்புவுக்கு சினிமாவில் ரெட் கார்டு போடப்போவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கு சிம்பு தன் பாடல் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
 
சமீபத்தில் நடிகர் சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் தனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்" பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டினார்.
 
இந்த புகார் அடிப்படையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மூலம் ரெட் கார்டு (நடிப்பதற்கு தடை) போடப்போவதாக செய்திகள் வெளியிட்டனர்.
நடிகர் சங்க தேர்தலின் போதே விஷாலுக்கு எதிராக குரல் கொடுத்தவர் சிம்பு. எனவே விஷால் தற்போது சிம்புவை பழி வாங்குகிறார் என்று சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.
 
இந்நிலையில் மீண்டும் கைவசம் நிறைய படங்களோடு வலம் வருகிறார் சிம்பு. சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்து வரும், ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படம் உருவாகிறது.
 
மேலும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ படம் தான் தமிழில் இந்த பெயரில் ரீமேக் ஆகிறது. விரைவில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே,  இந்த படத்திற்கு ரெட் கார்ட் போட வேண்டும் என்று விஷால் முயற்சிப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்ய, சிம்பு தனது ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.
 
இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் வரும் விதத்தில் பாடியுள்ளார். இந்த வரிகள் விஷாலை வம்புக்கு இழுப்பது போல் உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பாடல் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கலாம் .