ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:23 IST)

விக்கி-நயன் போல் தனி விமானத்தில் புது மனைவியுடன் பயணம் செய்த தயாரிப்பாளர் ரவீந்தர்!

maha ravi
விக்கி-நயன் போல் தனி விமானத்தில் புது மனைவியுடன் பயணம் செய்த தயாரிப்பாளர் ரவீந்தர்!
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டபின் தனி விமானத்தில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தனர் என்பது குறித்த புகைப்படங்கள் வெளியானது
 
அந்த வகையில் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர், தனி விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 
 இந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு நானும் எனது மனைவியும் தனி விமானத்தில் குலதெய்வம் கோவிலுக்கு செல்கிறோம். இதை வைத்து நீங்கள் ஹனிமூன் செல்வதாக இந்த புகைப்படத்தை வச்சு செஞ்சு விடாதீர்கள் என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்று குறிப்பிடப்பட்டது
 
ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி திருமணம் குறித்து பல சர்ச்சைகள் தோன்றினாலும் இருவரும் தற்போது சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது