வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2019 (19:30 IST)

இனி சூப்பர் ஸ்டாரே கேட்பாரே 'இன்கேம் இன்கேம் காவல.'. செம்ம குஷியில் ராஷ்மிகா!

பெங்களூரு பைங்கிளியான ராஷ்மிகா மந்தானாவை அக்கட தேசமான ஆந்திரா ஆரத்தி எடுத்து வரவேற்றது. கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். 'இன்கேம், இன்கேம் காவல' என்ற  ஒரு பாட்டு மூலம், உலக புகழ் பெற்றார் ராஷ்மிகா மந்தனா. 


 
இப்போது ஆந்திராவில் ராஷ்மிகாவுக்குத்தான் உச்சகட்ட மார்க்கெட். இப்போது இவருக்கு புதிதாக அடித்துள்ள அதிர்ஷ்டம் என்னவென்றால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ராஷ்மிகா மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். இருக்காதா பின்ன... இனி இன்கேம் இன்கேம் காவல என மகேஷ் பாவுவே கேட்பாரே... இதனால்... சாலே, இதி சாலே என்ற அளவுக்கு சந்தோஷத்தில் இருக்கிறார் ராஷ்மிகா.
 
மகேஷ்பாபு  ‘பரத் அனே நேனு’ படத்தின் வெற்றிக்கு பிறகு வம்சி இயக்கத்தில் ‘மகர்ஷி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
 
இப்படம் மே 9-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து அணில் ரவிபுடி இயக்கும் படத்தில் தான் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.