விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ஜெயம் ரவியின் இரண்டு நாயகிகள்
கடந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் திருநாள் படமாக வெளியான ஐந்து படங்களில் ஒன்று ஜெயம் ரவியின் 'அடங்கமறு'. இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிப்படமான நிலையில் இந்த படத்தின் நாயகி ராஷிகண்ணா, விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய்சேதுபதி தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்களில் ஒன்றை 'ஸ்கெட்ச்' இயக்குனர் விஜய்சந்தர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஒரு நாயகியாக ராஷிகண்ணா ஒப்பந்தமாகியுள்ளார். இதனை ராஷிகண்ணா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த படத்தின் இன்னொரு நாயகியாக நடிக்க நடிகை நிவேதா பேத்ராஜிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நிவேதா பேத்ராஜ் சமீபத்தில் ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' படத்தின் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி, ராஷிகண்ணா முதல்முறையாக இணையும் இந்த படத்தை விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது