1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2021 (12:19 IST)

பட்டாசு வெடிச்சு, மேளம் அடிச்சு, கேக் வெட்டி... ஜெயித்த ஆரி கூட இந்த ஆட்டம் ஆடல - 'பில்டப்' பாண்டியன்!

ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன். அதில் ரசிகர்கள் கிறங்கி போக பார்த்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது.
 
இதையடுத்து அவர் இப்போது பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துகொண்டார். இவர் நடிகர் அருண் பாண்டியன் அண்ணன் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பைனல் வரை சென்ற ஒரே பெண் போட்டியாளர் என்ற பெருமையை பெற்ற ரம்யா பாண்டியன் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 
 
அதில் பிக்பாஸில் இருந்து தோத்துவிட்டு வீடு திரும்பிய அவரை குடும்பத்தினர் மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து கேக் வெட்டி வரவேற்றுயுள்ளனர். இந்த வீடியோ இணையவாசிகள் கையில் சிக்கி கிண்டலுக்குள்ளாகி வருகிறது. டைட்டில் வென்ற ஆரி கூட இம்புட்டு அலப்பறை பண்ணலடா யப்பா... இந்த " பில்டப் பாண்டியன் " என்ன இப்படி சீன் போடுறாங்க என மீம் போட்டுத்தள்ளியுள்ளனர்.