வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2019 (12:22 IST)

கங்கனாவுக்கு பதில் நீங்களே நடிச்சிருக்கலாம்: ஜெயலலிதாவின் தோற்றத்தில் வைரலாகும் ரம்யா கிருஷ்ணன்!

மறைந்த தமிழ முதலவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் இயக்க கோலிவுட்டில் இருக்கும் பல இயக்குனர்கள் போட்டிபோட்டு முந்தியடைத்தனர். ஆனால், அதில் முதல் ஆளாக முந்திக்கொண்டவர் இயக்குனர் ஏ. எல் விஜய். இவர் தலைவி என்ற டைட்டிலில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து ஜெயலலிதா பையோ பிக்கை இயக்கி வருகிறார். 
 
அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நெட்டிசன்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் இரையானது. இதே போல் இயக்குனர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது. 
 
இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் தோற்றத்தில் இருக்கும் ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்ஸ் இந்த கேரக்டருக்கு நீங்க எவ்வளவோ மேல். கங்கனாவுக்கு பதிலாக நீங்களே தலைவி படத்தில் நடித்திருக்கலாம் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.