ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 12 ஜனவரி 2019 (14:59 IST)

தமிழில் வெளியாகும் ராம் சரணின் 'வினயை விதேயா ராமா']

ராம் சரண்  நடிப்பில்,சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள  ‘வினயை விதேயா ராமா’  படம்  தமிழிலும் வெளியாகிறது.


 
பாகுபலி வெற்றிக்குப் பிறகு தெலுங்கு நடிகர்களின் படங்கள் தமிழில் வருவது அதிகமாகி வருகிறது . அந்த வரிசையில் சிரஞ்சீவி மகனும் முன்னணி தெலுங்கு நடிகருமான ராம் சரண் கதாநாயகனாக நடித்து அதிக செலவில் தயாரிக்கப்பட்ட ‘வினயை விதேயா ராமா’ என்ற தெலுங்கு படமும் தமிழில் வெளியாகிறது. போயப்பட்டி சீனு இந்த படத்தை இயக்கி உள்ளார். 
 
கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாகசம், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படமாக ‘வினயை விதேயா ராமா’ படம் உருவாகி உள்ளதாக இயக்குனர் தெரிவித்து உள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.