செம போதையில் முத்தக் காட்சியில் 55 டேக் வாங்கிய ராக்கி சவாந்த்...
முத்தக் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் 55 டேக்குகள் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.
பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை ராக்கி சவாந்த். மோடியின் புகைப்படம் மற்றும் பாஜகவின் சின்னமான தாமரையை தனது உடலில் ஏடாகூடமான பகுதிகளில் வரைந்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
அவர் தற்போது இயக்குனர் ஷாகித் காஸ்மி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறது. சமீபத்தில் அப்படத்டில் இடம் பெறும் ஒரு முத்தக்காட்சி படம் பிடிக்கப்பட்டது.
கதைப்படி, குடிப்பழக்கத்திற்கு அடிமையான கதாபாத்திரத்தில் ராக்கி நடிக்கிறார். எனவே, காட்சி இயல்பாக வர வேண்டுமென ஒரு ஆஃப் பாட்டில் சரக்கை உள்ளே தள்ளிவிட்டு படப்பிடிப்பிற்கு வந்துள்ளார் ராக்கி. மேலும், முத்தக்காட்சியில் சரியாக நடிக்காமல் 55 டேக் வரை வாங்கியுள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ராக்கி “அந்த முத்தக்காட்சியில் நடிக்கும்போது இது நடிப்புதான் என என்னால் உணர முடியவில்லை. உண்மையிலேயே அப்படி நடப்பது போலவே தோன்றியது. மிகவும் பயந்துவிட்டேன். என்னை யாரோ கட்டாயப்படுத்தி முத்தம் கொடுப்பது போல உணர்ந்தேன்” என ராக்கி தெரிவித்துள்ளார்.