வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (17:37 IST)

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு...

நடிகர் ரஜினிகாந்த்துக்கு போயஸ் கார்டனில் வீடு உள்ளது. இந்நிலையில் இவ்வீட்டுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி திருமதி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை E3  காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.
ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்துக்கும், கோவையை சேர்ந்த தொழிலதிபர் வணங்காமுடி என்பவருடைய மகன் விசாகன் என்பவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி  ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் திருமணம் நடக்கவுள்ளது.
 
திருமணத்திற்குப் பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் பல்வேறு முக்லிய பிரமுகர்கள், நடிகர்கள் கலந்துகொள்ள இருப்பதால் தனது இல்லத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை E3  நிலையத்தில் மனு அளித்திருப்பதாக தகவல் வெளியாகின்றன.