திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (15:50 IST)

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த ரஜினி: வைரல் புகைப்படம்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த ரஜினி: வைரல் புகைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை தனது மகள்களுடன் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்பவரை உலகின் பல பிரபலங்கள் சந்தித்து வருகிறார்கள் என்பது தெரிந்தது. சமீபத்தில் இந்தியா வந்த லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் கூட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது 
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோருடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் விரைவில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது. ரஜினியின் அடுத்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்றும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அல்லது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது