1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (22:36 IST)

மேன் வெர்சஸ் வைல்ட்’ படப்பிடிப்பில் ரஜினிக்கு காயமா? வைரலாகும் புகைப்படம்!

டிஸ்கவரி சேனல் தயாரிக்கும் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தின் நடைபெற்றது
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிக்கு காயம் ஏற்பட்டதாக டுவிட்டரில் ஒரு சிலர் செய்தி வெளியிட்டிருந்தனர். ஆனால் கர்நாடக வனத்துறையினர் மற்றும் படக்குழுவினர் இதனை உறுதி செய்யவில்லை
 
இந்த நிலையில் படக்குழுவினர்களின் ஒருவர் படப்பிடிப்பு முடிந்தவுடன் எடுக்க புகைப்படத்தை பதிவு செய்து ரஜினிக்கு காயம் ஏற்பட்டதாக வெளியிட்டுள்ள தகவலில் உண்மை இல்லை என்றும் ரஜினி நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ படத்தை முடித்துவிட்டு நல்லபடியாக சென்னை திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து ரஜினிக்கு காயம் என்று வெளியான தகவல் வதந்தி என்பது உறுதியாகிறது மேலும் கர்நாடக வனத்துறை அதிகாரிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது