ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (15:19 IST)

பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்!

பிரதமர் மோடி இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிஜி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது

மேலும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில் மரியாதைக்குரிய அருகை நரேந்திரமோடி அவர்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் கடினமான காலங்களில் தங்களில் செயல்  மூலம் செய்து காட்டியுள்ளீர்கள் உங்களுக்கு பலம் கிடைக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.