திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 14 டிசம்பர் 2022 (13:30 IST)

அமைச்சர் உதயநிதிக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த் வாழ்த்து!

Rajini Kamal
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியவாறு குறித்து தற்போது பார்ப்போம்
 
கமல்ஹாசன்: வாழ்த்துகிறேன் தம்பி  உதயநிதி ஸ்டாலின்.  அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
 
ரஜினிகாந்த்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய வாழ்த்து செய்தியில், ‘தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் 
 
Edited by Siva