ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஜனவரி 2021 (16:47 IST)

ரஜினி, விஜய், விஷால் பட நடிகர் திடீர் மரணம்...திரைத்துறையினர் அதிர்ச்சி

பிரபல தெலுங்கு நடிகர் நர்சிங் யாதவ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திரய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பாட்ஷா, மற்றும்  விஜய்யின் குருவி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அதிகப் பரிட்சயம் ஆனவர் நடிகர் நர்சிங் யாதவ்.

இவர் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்துள்ளார்.

குறிப்பாக சர்ச்சைக் கருதுக்களை தெரிவித்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் ராம்கோபால் வர்மாவில் அத்துனை படம்ங்களிலும் நர்சிங் யாதவ் நடித்துள்ளார்.

மேலும்விஷால் நடிப்பில் வெளியான பூஜை, விக்ரமின் ராஜபாட்டை, ஆட்டநாயகன், பிரபு சாலமன் நடிப்பில் சார்மி நடித்த லாடம் , விஜய்யின் குருவி போன்ற பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நர்சிங் யாதவ் இன்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நர்சிங் யாதவ், மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலனானர். அவரதுமரணம் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.