புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (20:59 IST)

ரஜினி பட நடிகையின் ஹாலிவுட் எண்ட்ரீ..ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தமிழ் மலையாள படங்களில் நடித்துவரும்  பிரபல நடிகை  ஹீமோ குரேஷி ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இந்தி சினிமாவில் முன்னணி நடிகை ஹூமா  குரேஷி. இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த ஓய்ட் என்ற படத்தின் மூலம்  சினிமாவில் அறிமுகமானார்.  பின்னர் பா.ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்த் நடித்த காலா என்ற படத்தின் நடித்து அசத்தினார்.

தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ஹூமா குரேஷி. ஹாலிவுட்டில் viceroys house என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் ஸேஜ் ஸ்னைடர் இயக்கத்தில் உருவாகிவரும்  ஆர்டர் ஆஃப் டெட் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படம்  மே மாதம் 21 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.