’’ரஜினி படம்தான் சிறந்த பரிசு’’- அண்ணாத்த பட பாடலாசிரியர் நெகிழ்ச்சி
சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த்- நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் தீபாவளிக்கு தியேட்டரில் வெளியான படம் அண்ணாத்த.
இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது.
இந்நிலையில், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதி மக்களிடையே பிரபலமானக உள்ள பாடலாசிரியர் அருண் பாரதி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், எங்கள் தங்கையின் திருமணத்திற்கு பிறகு, முதலில் சென்று பார்த்த படம் அண்ணாத்த இன்று அவள் பிறந்தநாள். என்ன பரிசு வேண்டும் என்று கேட்டேன்
அண்ணாத்த படத்திற்கு "மீண்டும் ரெண்டு டிக்கெட் போட்டுக் கொடுன்னே" அதைவிட சிறந்த பரிசு இருக்க முடியாது என கண்கலங்கினாள் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.