வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:31 IST)

வெளியானது ரஜினியின் 'பேட்ட' செகண்ட் லுக்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'பேட்ட' என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் ரஜினியுடன் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள் ஶ்ர. இவர்களுடன் தற்போது நடிகரும், இயக்குநருமான சசிகுமார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், உள்ளிட்ட வட இந்திய
பகுதிகளில் நடந்தது. பேட்ட படத்தில் ஹாஸ்டல் வார்டனாக   நடிக்கிறார் ரஜினி. மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது லுக் வெளியாகி உள்ளது.